தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசியலமைப்புச் சட்டத்தை பாதிக்கும் வகையில்  திருத்தங்கள் கொண்டு வந்தால் நீதிமன்றம் அனுமதிக்காது' - உச்ச நீதிமன்ற நீதிபதி

சென்னை: அம்பேத்கர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தால், நீதிமன்றம் அதனை அனுமதிக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்  சிவசுப்பிரமணியம் நினைவு கருத்தரங்கம்  சென்னை பார் கவுன்சில்  Periyar is the pioneer of revolution in tamilnadu, SC judge comments  Periyar is the pioneer of revolution
நீதிபதி சிவசுப்பிரமணியம் நினைவு கருத்தரங்கம்

By

Published : Feb 2, 2020, 12:54 PM IST

மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சிவசுப்பிரமணியம் நினைவு கருத்தரங்கம் சென்னை பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் காலத்தில் இருந்தே சமூக சீர்திருத்தங்கள் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

டாக்டர். அம்பேத்கர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை பாதிக்கும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்தால், அதனை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் கூறினார்.

நீதிபதி சிவசுப்பிரமணியம் நினைவு கருத்தரங்கம்

இந்நிகழ்ச்சியில் மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.எம். சுந்தரேஷ், கிருபாகரன், பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கீழடி குறித்த அசத்தலான நூல்: மதுரையில் அமோக விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details