புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு நீடித்து வருகின்றது. இந்நிலையில், சென்னை சிம்சனில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை! - periyar dravidar kazhagam
சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பெரியார் திராவிடர் கழக செயலாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் திராவிடர் விடுதலை கழகம் தென் சென்னை செயலாளர் உமாபதி பேசினார். அவர் கூறுகையில், “புதிய தேசிய கல்விக் கொள்கை குலக் கல்வி திட்டத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும், இதனால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மானவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மும்மொழி கொள்கையை எதிர்த்துள்ள தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சரை அவமதித்த நாளிதழை எரிக்க முயன்ற தபெதிகவினர்!