தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் - 'வேள்பாரி நாவல்' 'பரியேறும் பெருமாள்'

சென்னை: தந்தை பெரியாரைப் பற்றிய 8 கேள்விகள், தமிழ்நாடு சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கியம், உள்ளிட்டவைகளிலிருந்து குரூப்-1 தேர்வில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்
பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்

By

Published : Jan 3, 2021, 7:57 PM IST

Updated : Jan 3, 2021, 8:37 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாற்றப்பட்ட புதிய விதிமுறையுடன், புதிய பாடத்திட்டத்துடன் குரூப்-1 பணிக்கான தேர்வு இன்று (ஜன.03) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

குருப் 1 திராவிட இயக்கம் பற்றிய கேள்விகள்
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களில் காலியாகவுள்ள 66 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்தத் தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்களும் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
குருப் 1 திராவிட இயக்கம் பற்றிய கேள்விகள்

தமிழ்நாட்டில், தமிழ் மாெழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு போன்றவற்றிக்கு கேள்விகளில் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

‘மலரிதழால் தமிழ் நிலம் காத்த மாமன்னன்’ - பேரறிஞர் அண்ணா
தமிழர்களின் சீர்திருத்தவாதிகள்
பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்

தமிழர்களின் சீர்திருத்தவாதிகளான பெரியார், அண்ணா போன்றவர்களின் கருத்துகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், தமிழ்நாடு சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கியம், உள்ளிட்டவைகளிலிருந்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

குரூப் - 1 திராவிட இயக்கம் பற்றிய கேள்விகள்


'வேள்பாரி நாவல்' 'பரியேறும் பெருமாள்'

'வேள்பாரி நாவல்' 'பரியேறும் பெருமாள்'
அந்த வகையில் தந்தை பெரியாரை சார்ந்து அவர் தொடர்புடைய 8 கேள்விகள் இடம் பிடித்தன. பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கம் தொடர்புடைய கேள்விகளும் , சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்) எழுதிய வேள்பாரி நாவல் பற்றியும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தன.
குரூப் - 1 திராவிட இயக்கம் பற்றிய கேள்விகள்
தமிழ்நாடு சார்ந்த கேள்விகள், இனி வரக்கூடிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் அதிகம் இடம்பெறும் என்று தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்திருந்தது.
குரூப் 1 திராவிட இயக்கம் பற்றிய கேள்விகள்

இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில், துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 4 பணியிடங்கள், தீயணைப்பு, மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்கு 2020 ஜனவரி 20ஆம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (ஜன.03) நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும், 11 திருநங்கைகளும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது, 32 மாவட்ட தலைநகரங்களில் 856 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதையும் படிங்க:'மத்திய அமைச்சர் பதவியை விரும்பவில்லை'- மு.க. அழகிரி

Last Updated : Jan 3, 2021, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details