தமிழ்நாடு

tamil nadu

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கைது!

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர்.

By

Published : Dec 9, 2020, 1:27 PM IST

Published : Dec 9, 2020, 1:27 PM IST

ரயில் மறியல்  பெரியார் உணர்வாளர்கள் கைது  சென்னையில் பெரியார் உணர்வாளர்கள் கைது  Periyar activists Arrested In Chennai  Periyar activists Arrested  Periyar activists arrested for trying to block train
Periyar activists Arrested In Chennai

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில், பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்ற போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:வேல் யாத்திரை முடிந்ததும் கைது நடவடிக்கை: நாடகமாடும் தமிழ்நாடு காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details