தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் - முதலமைச்சரை சந்தித்த பிறகு பேரறிவாளன் நெகிழ்ச்சி - Perarivalan

தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார் என சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரைச் சந்தித்த பிறகு பேரறிவாளன் பேட்டியளித்தார்.

தன்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்- முதல்வரை சந்தித்த பிறகு பேரறிவாளன் பேட்டி
தன்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்- முதல்வரை சந்தித்த பிறகு பேரறிவாளன் பேட்டி

By

Published : May 18, 2022, 10:02 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று(மே18) 7 மணி விமானத்தில் கோவை புறப்பட இருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

இந்தநிலையில் இன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், அவரின் தாயார் மற்றும் குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் 20 நிமிடங்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் உடனான சந்திப்பின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன் கூறுகையில், 'முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி சொல்வதற்காக இங்கு வந்துள்ளோம். முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தது மிகவும் மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துள்ளார் முதலமைச்சர். அதனால்தான் தற்போது இந்த முடிவு கிடைத்துள்ளது.

முதலமைச்சர் தங்களிடம் குடும்பப் பின்னணி குறித்து கேட்டறிந்தார். தன்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் எதிர்கால வாழ்க்கை குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. அதற்கான நேரம் இது இல்லை. மற்றவர்கள் விடுதலை குறித்து அவர்களுக்கு வரும் தீர்ப்பை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் தற்போது வெளியே வந்து உள்ளேன்’ எனக் கூறினார்.

இதையடுத்து அவரின் தாய் அற்புதம்மாள் கூறுகையில், ‘பேரறிவாளன் பரோலில் வெளியே வந்ததால் அவருக்கு மருத்துவ உதவிகள் சரியாக கிடைத்தது. முதலமைச்சரிடம் பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டார். இனி அவர் சிறைக்குச் செல்லாமல் இருக்க நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

முதலமைச்சரை சந்தித்த பிறகு பேரறிவாளன் நெகிழ்ச்சி

அதற்கு முதலமைச்சர் உங்களுக்கு உள்ள உணர்வு தான் எனக்கும் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் செய்கிறேன் என உறுதியளித்தார். இன்று விடுதலை ஆகிய உடனே அவரைச் சந்தித்து நன்றி தெரிவிக்கவந்தோம். எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்’ என்றார்.

பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் பேட்டி

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் இருந்தனர்.

இதையும் படிங்க:பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details