தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலங்குகளுக்காகவே மனிதர்கள் - ஷிரானியின் அன்பு சூழ் பயணம் - சென்னை செங்குன்றம்

சென்னை: செங்குன்றம் பகுதியில் "விலங்குகளுக்கான மனிதர்கள்" என்னும் அமைப்பை நடத்தி வரும் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேராவின் அன்பு பயணத்தில் இக்கட்டுரையின் மூலம் நாமும் இணைந்து பயணிப்போம்.

தன் பிள்ளைகளோடு விளையாடும் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேரா

By

Published : Aug 17, 2019, 8:11 PM IST

ஆறாம் அறிவை பயன்படுத்தி எட்டாத செவ்வாயில் எட்டு வைத்து நடக்கத் தொடங்கிவிட்டோம். அந்த அளவிற்கு நம் அறிவியலும் அன்றாட செயல்களும் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. அதே நேரத்தில் அந்த அசுரத்தனம் நம்முள்ளும் பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. "மனிதத்தால் முழுமை அடைந்தவனை மனிதன்" என்ற வரையறை இன்று உப்புக்குச் சப்பான கதையாகிவிட்டது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், அகதிகள், அநாதைகள் இப்படி ஆதறவற்ற குரல்களுக்கே இடமில்லாத போது குரலே எழுப்ப முடியாத வாயில்லா பிராணிகளுக்கும் வாழ்வுண்டு என்பதை யார் அறிவார். எங்களின் இந்த ஆராய்ச்சி பணி சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியை நோக்கி பயணித்தது.

விலங்குகளுக்காகவே மனிதர்கள் - ஷிரானியின் அன்பு பயணம்

விலங்குகளுக்காகவே ஒரு வீட்டை அமைத்து தனது ஒவ்வோரு அசைவிலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேரா. இவர் 1994இல் "விலங்குகளுக்கான மனிதர்கள்" என்னும் அமைப்பை தொடங்கி 26 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மனித சக்திகளால் துன்புறுத்தலுக்கு ஆளான நாய், பூனை, குதிரை, ஆடு, கழுதை, மாடு போன்ற உயிரினங்களை தன் பிள்ளைகள் போலவே பராமரித்து வருகின்றார். அவைகளை பாதுகாக்க தனி ஆயாக்கள், 24 மணி நேரமும் மருத்துவ வசதி, கட்டில், மின் விசிறி போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தந்து நமக்கும் ஆசை வளர்க்கிறார்.

இங்கு உள்ள ஒவ்வொரு பிராணிகளுக்கும் பின்னர் ஒரு கதை உள்ளது என்ற அவரின் பேச்சும் செயலும் இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ் அசிசியை நினைவு படுத்துகிறது.

ஷிரானியின் நம்பிக்கையே இதனின் நான்காவது கால்

"மாடுகள் அதிக அளவில் ஆந்திரா, கேரளா மாநிலத்திற்குக் கடத்தப்படுவதை நாங்களே 12 வருடங்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளோம். அந்த சமயத்தில் எங்களையும், பிராணிகளையும் கடுமையாகத் தாக்கினர். அந்த செயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அரசாங்கமே 2004இல் மாநில மிருகங்கள் நல காப்பக ஆணையம் தொடங்கியது" என்று கூறும் ஷிரானி பெரேராவின் இந்த பயணம் 26 வருடங்களைத் தாண்டிவிட்டது. மயிலுக்கு போர்வை தந்த பேகன், புறாவுக்கு இரங்கிய சிபி சக்கரவர்த்தி, தொழுநோயை புனிதப்படுத்திய தெரசா என்று வரலாற்றை பேசியே வாழ்வை கழிக்கும் நம் போன்றவர்கள் மத்தியில் வரலாற்றாகவே வாழ்ந்து இடம் பிடித்த ஷிரானி அவர்களுக்கும் விலங்குகளுக்கான மனிதர்கள் அமைப்பினருக்கும் எங்களின் பாராட்டுகள்!

கடத்தப்படும் மாடுகளை மீட்டல்

ABOUT THE AUTHOR

...view details