தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்க வேண்டும்!

காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்குவது சமூகத்தில் நோய் பரவுதலை தடுப்பதற்கு சிறந்த தீர்வுகளில் ஒன்று.

காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்க வேண்டும்!
காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்க வேண்டும்!

By

Published : Dec 9, 2022, 6:25 PM IST

சென்னை:இதுதொடர்பாக பிளாசம் (Blossom) தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எளிதில் தொற்றக்கூடிய, ஆனால் குணப்படுத்தக்கூடிய காச நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கு விழிப்புணர்வை அதிகரித்தல், தொடர் சிகிச்சை எடுப்பதை உறுதிப்படுத்துதல் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக் கூடிய காசநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

விருதுநகரை மையமாகக் கொண்டு செயல்படும் பிளாசம் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு சுகாதாரம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் CCTATA என்ற திட்டத்தினை STOP/ TB UNOPS நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு திட்டங்களை வரையறுத்தல், பாதிக்கப்பட்ட சமூகத்தினரை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களுக்கானக் கூட்டமைப்பை உருவாக்குதல் ஆகும். மேலும் பெங்களூருவைச் சேர்ந்த PAC (Public Affairs Centre) என்ற ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மூன்று மாவட்டங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களிடம் “ஆரோக்கியம் தேடும் நடத்தை” “Health Seeking Behavior” குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நோய் அறிகுறி தென்பட்டு காசநோயினை பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதே நோய் பரவுதலுக்கும், நோய் முற்றிய நிலை ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக அமைகிறது. மேலும் காச நோயின் அறிகுறி தென்பட்டு பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும், சமூகத்தில் உள்ள காசநோய் பற்றிய தவறான கருத்துகள் மற்றும் ஒதுக்குதல் புறக்கணித்தலே காரணமாக அமைகிறது.

காசநோய் அறிகுறி தென்பட்ட நபர் பரிசோதனை மேற்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலதாமதமே, சமூகத்தில் காசநோய் பரவுதலை அதிகரிக்கிறது. காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகொள்ளாத ஒரு நபர், வருடத்திற்கு 10 முதல் 14 நபர்களுக்கு காசநோயை பரப்புகிறார். இதற்கு காசநோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமை, காசநோய் பற்றிய தவறான புரிதலே காரணமாய் இருக்கிறது.

எனவே காசநோய் குணப்படுத்தக் கூடிய ஒரு நோய் என்பதை சமூகத்தில் ஆழப்பதிய வேண்டும். விழிப்புணர்வு செய்வதோடு மட்டுமல்லாது, நோய் தொற்றினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, அதிகம் பாதிப்புள்ள பகுதியில் சுகாதார முகாம்கள் நடத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தாமதமின்றி சிகிச்சையை தொடங்குவது சமூகத்தில் நோய் பரவுதலை தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும்.

காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்க வேண்டும்

காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தாமதிப்பதில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். சமூகத்தில் இன்றளவும் இருக்கக் கூடிய காசநோய் பற்றிய மூடநம்பிக்கைகள் மற்றும் பொருளாதார சூழ்நிலையே இதற்கு காரணமாக இருக்கிறது.

காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினராலேயே புறக்கணிக்கப்படுவதால், சிகிச்சையை முழுமையாக முடிப்பதிலும் குணப்படுத்துவதிலும் தாமதம் ஏற்ப்படுகின்றது. காசநோய் மனிதனின் நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கக் கூடியது என்பதால், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மூலம் மற்றவருக்கு இந்நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

மருத்துவ வசதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் நோய் பாதிப்புகள் விவரம்

இந்த நிலையில், காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், காசநோய் பற்றிய தவறானக் கருத்துக்களை மக்களிடம் இருந்து நீக்குதல், நோய் பரவுதல் குறித்த அச்சம் போன்றவற்றை நீக்க வேண்டும். காசநோய் முழுமையான தொடர் சிகிச்சை மூலம் கண்டிப்பாக குணப்படுத்தக் கூடிய நோய் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையை இடை நிறுத்துவது காசநோயைக் கட்டுப்படுத்துவதில் மிகக் கடுமையான பிரச்னையாகவும், நோயை குணப்படுத்துவதில் பெரும் தடையாகவும் உள்ளது.

மதுரை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்தில் CCTATA திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்ப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையை இடை நிறுத்தம் செய்த நபர்களுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண்ணின் கருப்பையில் 2 கிலோ எடையில் நீர்க்கட்டி.. இந்த அறிகுறி இருந்தா உஷாரா இருங்க!

ABOUT THE AUTHOR

...view details