சென்னை:தாம்பரம் அடுத்த சேலையூர் பதுவஞ்சேரி பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர், அனுசுயா. இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திண்டிவனத்தில் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவரின் வீட்டுக்கதவு திறந்திருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன அனுசியா உடனடியாக குடும்பத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 16 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 5000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அனுசியா சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைரேகை நிபுணர்களுடன் சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஏர்போர்ட் ரெய்டு: 234 வழக்குகள் பதிவு...144 பேர் கைது.. ரூ.262.05 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல்..!