சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசும், சென்னை குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள தண்டையார் பேட்டை, மணலி, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட 15 பகுதிகளில் குடிநீர் வாரியம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைப்பெற்றது.
குடிநீர் வழங்கிய அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த திமுகவினர் ! - officers
சென்னை: தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கியதற்காக அலுவலர்களுக்கும், அரசுக்கும் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைப்பெற்ற முகாமில் மத்திய சென்னை திமுக 100 வார்டு வட்ட செயலாளர்கள் சுகுமாறன் தலைமையில் வந்த பொதுமக்கள் சிறப்பாக செயல்ப்பட்டு தட்டுபாடின்றி குடிநீர் வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததுடன், அரசுக்கும், அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் ராமசாமி கூறும்போது, ”கடற்கரை பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆழ்துளை பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரட்டை ஏரியில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு கீழ்பாக்கம் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்தரிக்கப்பட்டு குடிநீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து சலுகைகளையும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளது” என்றார்.