செங்கல்பட்டு: நெடுங்குன்றம் ஊராட்சியில், எஸ்.எஸ்.எம். நகர், டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பல நகர்கள் உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள விவேகானந்தர் சாலை என்.ஜி.ஓ. நகரையும், எஸ்.எஸ்.எம். நகரையும் இணைக்கும் முக்கிய சாலையில் தினமும் 5,000க்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன.
இதுமட்டுமின்றி இதுதான் 3,000 வீடுகள் கொண்ட எஸ்.எஸ்.எம். நகர் நுழைவுக்கு பிரதான சாலையாக உள்ளது. வரைபடத்தில் 50-60 அடி சாலையாகவுள்ள இது, நிஜத்தில் 20அடி சாலையாகத்தான் உள்ளது. காரணம், தனியார் கட்டுமானத்திற்காக சாலையின் பெரும்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் என்கின்றனர், சமூக ஆர்வளர்கள்.
மேலும் மற்றொரு நகரிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர், தினமும் இரவு தெருவில் வெளியேற்றப்பட்டு இந்தப் பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவதால் மீதமுள்ள 30 அடி சாலையில், வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.