பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ' காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பாமக பல்வேறு வகையில் கோரிக்கை வைத்திருந்தது. உடனடியாக, தமிழ்நாடு முதலமைச்சர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், இதனை சட்டமாகக் கொண்டு வரவேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
மேலும் ' திமுகவும் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது திமுக. ஆனால், இப்பொழுது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ். கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது திமுக. தற்போது அதனை மீட்பதாக கூறி வருகிறார்.