சென்னை: சமீபத்தில் மின்சார வாரியம் தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் வெளிவருகின்றன. அதை சாதகமாகப் பயன்படுத்தி மக்களிடம் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மின்சார வாரியம் தொடர்பாக ஏதேனும் வதந்தி செய்திகள் வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரியம் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "அன்புள்ள நுகர்வோர் உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால், உங்கள் மின்சாரம் இன்றிரவு XX:XX மணிக்கு துண்டிக்கப்படும். மின்சார அலுவலகத்திலிருந்து துண்டிக்கப்படுவதை தவிர்க்க தயவு செய்து உடனடியாக எங்கள் மின்சார அதிகாரியைத் தொடர்புகொள்ளவும் அல்லது WhatsApp மின் கட்டண ரசீதை ஸ்கிரீன்ஷாட் செய்து அல்லது பில் விவரங்களை அனுப்பவும். (+91XXXXXXXXXX) நன்றி" என வருகிறது.