இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் உள்ள தேவையற்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்ல வேண்டும். பொதுமக்கள் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண மையங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிவாரணங்களை பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்ப்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண் 044- 25384530 மற்றும் 044- 25384540 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள சென்னை மாநகராட்சி! நிவர் புயல் நெருங்குவதையொட்டி கடலோர, வட மாவட்டங்களில் அதிதீவிர மழையுடன் புயல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தது.
இதையும் படிங்க :'நிவர் புயல்... பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆலோசனைகளை முதலமைச்சர் செயல்படுத்தாதது ஏன்?'