சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு, கரோனா தொற்றை கட்டுப்படுத்திய விதம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக் கொள்ளவும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிந்து கொள்ளவும், மருந்துகள் கொள்முதல் செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை கண்டறிந்து தெரிந்து கொள்வதற்காக மஹாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அனுகுஸ்ராவ் தோபே தலைமையில், அம்மாநில சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், ”தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு தன்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதேபோல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுத் திட்டமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.