சென்னை: தமிழ்நாடு முழுதும் இன்று (மே.24) முதல், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அநாவசியமாக வெளியே வருபவர்களைக் கண்காணிக்க 12 காவல் மாவட்டங்களில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகளும், நகர்பகுதிகளில் 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் பத்தாயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கமான வாகன போக்குவரத்து காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
விதிகளை மீறி வாகனங்களில் வருபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, அநாவசியமாக வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கம் போல வாகன போக்குவரத்து காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்