தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூனையை மீட்க ஒன்றிணைந்த பூ வியாபாரிகள்: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ - people rescue the act in chennai

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக உயரமான இடத்தில் சிக்கித்தவித்த பூனையை பூ வியாபாரிகள் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

people-rescue-cat-in-chennai-video-going-viral-on-social-media
பூனையை மீட்க ஒன்றிணைந்த பூ வியாபாரிகள்; சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

By

Published : Feb 12, 2021, 6:02 PM IST

சென்னை: சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள நடைபாதை வியாபாரிகள் விற்பனைக் கூடத்தின் இரண்டாம் தளத்தின் சுற்றுச்சுவரில் நேற்று காலை பூனையொன்று சிக்கிக்கொண்டது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்க முடியாமல் தவித்த பூனை பயத்தில் கத்த தொடங்கியது. இதைக்கண்ட பூ வியாபாரிகள் பூனையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

வைரலாகும் வீடியோ

உயரமான இடத்தில் பூனை சிக்கியதால் மேலே இருந்து கீழே விழுந்து பூனைக்கு காயம் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் செய்வதுபோல் போர்வை ஒன்றைப் பிடித்துக்கொண்டனர். பின்பு, பூனையை கட்டையால் நகர்த்தி போர்வையில் விழ செய்து காப்பாற்றினர்.

பூ வியாபாரிகள் பூனையை மீட்பதை அந்தப் பகுதயில் இருந்த மக்கள் மொபைலில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ஒரு மாதத்தில் 20 முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது

ABOUT THE AUTHOR

...view details