தமிழ்நாடு

tamil nadu

கனமழையால் அரசு மருத்துவமனையில் உருவான திடீர் குளம்.. பொதுமக்கள் அவதி...

By

Published : Dec 10, 2022, 6:38 PM IST

தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனையில் குளம்போல் தேங்கி உள்ள நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலால் தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் போல் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் சித்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த மூலிகை மற்றும் பழ மரங்கள் சூறாவளிக் காற்றில் சிக்கி முறிந்து விழுந்தன.

இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். நுழைவு வாயில் பகுதியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு அதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கிய மழை நீரை விரைந்து அகற்றக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு சித்த மருத்துவமனையில் சூறாவளிக் காற்றால் மூலிகை மரங்கள் முறிந்து விழுந்தன

இதையும் படிங்க:டிவிட்டரில் இருந்து டிரம்ப் நீக்கம் திட்டமிட்டு நடந்ததா?.. டிவிட்டர் பைல்ஸ் 3.0 வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details