தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதையை மறைத்து மணல் கொட்டிய மெட்ரோ நிர்வாகம்: பொதுமக்கள் எதிர்ப்பு..!

சென்னை: ஆலந்தூரில் ரயில் நிலையம் அருகே உள்ள பாதையை மறைத்து மணல் கொட்டியுள்ள மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதையை மறைத்து கொட்டிக்கிடக்கும் மணல்

By

Published : Nov 17, 2019, 2:23 AM IST

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பாதையை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாதை மெட்ரோ ரயில் நிலையத் தூண்களுக்கு இடையே செல்கிறது. இந்தப் பாதையை கையகப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு பாதையை மூடும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் செயல்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 14ஆம் தேதி இரவு மெட்ரோ நிர்வாகம், அந்த பாதை முழுவதும் மண்னை கொட்டி யாரும் செல்ல முடியாத வகையில் மூடியதாக கூறப்படுகிறது.

பாதையை மறைத்து கொட்டப்பட்டுள்ள மணல் குவியல்

இதனையறிந்த அப்பகுதி மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன் தலைமையிலான அனைத்துக் கட்சியினர் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்து போடப்பட்ட மணல் குவியல்களை உடனே அகற்றவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அங்குவந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : குடிநீர் பஞ்சத்தை போக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details