சென்னை:நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த டிச.28ஆம் தேதி காலமானார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள், திரையுலகினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி மற்றும் அமைப்பு பாகுபாடு இல்லாமல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியைக் காணத் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக இன்று(ஜன.16) வந்திருந்தார்.
அப்போது ஏராளமான பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக விஜயகாந்த் சமாதியைக் காண வந்தனர். தேமுதிக தொண்டர்கள்,5 பேர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,“விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு எங்களால் நிம்மதியாக எதையும் செய்யமுடியவில்லை. தன் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்து இன்று அவர் மனித கடவுளாக இருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக, விருதம் இருந்து மொட்டை அடித்து இருக்கிறோம்” என்றானர்.
இது தொடர்ந்து திருச்சியிலிருந்து அஞ்சலி செலுத்த வந்த பெண் கூறுகையில் “ கேப்டன் இறந்த போது எங்களால் பார்க்க முடியவில்லை. சிறு வயதிலிருந்தே விஜயகாந்த் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய அப்பா இறப்பில் கூட நான் இவ்வளவு அழுதது கிடையாது.