தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளில் கரோனா மையம் அமைக்க எதிர்ப்பு - people Opposition to set up Corona Center in private schools in chennai

சென்னை: தனியார் பள்ளிகளில் கரோனா மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

people-opposition-to-set-up-corona-center-in-private-schools-in-chennai
people-opposition-to-set-up-corona-center-in-private-schools-in-chennai

By

Published : May 1, 2020, 2:50 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள் 40 நாள்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் கரோனா மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கரோனா தொற்று நோயாளிகள் தனியார் பள்ளிகளில் தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக தனியார் மருத்துவமனைகள், விடுதிகள், லாட்ஜ்கள், நட்சத்திர விடுதிகள், கல்யாண மண்டபங்கள், ஊருக்கு வெளியே செயல்படாத பொறியியல் கல்லூரிகளில் தங்கவைத்து சிகிச்சையளிக்கலாம்.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்

தனியார் பள்ளிகளில் நோயாளிகளைத் தங்கவைப்பதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, குழந்தைகள் பாதிக்கப்பிற்குள்ளாவார்கள். அதைக் காரணமாகக்கொண்டே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப பயப்படுவார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளை நாளைக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற அரசாணையை திரும்பப்பெற வேண்டும்" என்றார்.

இதையும் பார்க்க: சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details