கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், வதந்தி காரணமாகவும் மக்களிடையே போதிய ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் கரோனா பரவல் வேகம் எடுத்து உள்ளதால் தடுப்பூசி போட்டு கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 15) காலை முதலே பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூடுதல் தடுப்பூசி டோஸ்களை அனுப்ப தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
கோவை, மதுரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது, சுகாதாரத்துறை உடனே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனாவின் இரண்டாம் அலை பரவல்: தடுப்பூசி போட குவிந்த மக்கள் - Corona Vaccine
சென்னை: கரோனா இரண்டாம் அலை படுவேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Omandurar Hospital
Last Updated : Apr 16, 2021, 3:33 PM IST