சென்னை:மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான பல போட்டிகள் நடைபெறுகின்றன. அது மட்டுமல்லாமல் காலை, மாலை என ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஊசிகள் மூலம் மருந்து செலுத்தும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விளையாட்டு அரங்க அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள உடற்பயிற்சியாளர் ஊசி மூலம் மருந்தை ஒரு நபருக்கு செலுத்தியதும், ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்தானது உடல் வலிக்கும் காய்ச்சலுக்கும் செலுத்தக்கூடிய மருந்து என்பதும் தெரியவந்துள்ளதாக விளையாட்டு அரங்க அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.