தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அடுத்த முதலமைச்சர் ஈபிஎஸ்தான் என்று மக்கள் தங்கள் நெஞ்சில் குறித்து வைத்துவிட்டார்கள்' - முதலமைச்சர் ஈபிஎஸ்

சென்னை: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று மக்கள் தங்கள் நெஞ்சில் குறித்து வைத்துவிட்டார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஈபிஎஸ்
முதலமைச்சர் ஈபிஎஸ்

By

Published : Dec 29, 2020, 9:27 AM IST

வடசென்னை அடுத்த தண்டையார்பேட்டைக்குள்பட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (டிச. 28) நடைபெற்றது. இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், "ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசப் பேச எங்களுக்கு 10 சதவீதம் வாக்கு கூடிக் கொண்டே உள்ளது. திமுகவின் கிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்களுக்குப் பல இடங்களில் அவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கனிமொழி பரப்புரை
கிராம சபையை பஞ்சாயத்துத் தலைவர்தான் கூட்ட வேண்டும். இதை நாங்கள் சொன்ன பிறகு மக்கள் சபை என்று பெயர் மாற்றி திமுக பரப்புரை செய்துவருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

சாதனையைச் சொல்லி வாக்கு கேட்டோம்

கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனையைச் சொல்லி வாக்கு கேட்டோம், திமுக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் 8 மருத்துவக் கல்லூரிகள்தான் திறக்கப்பட்டன. எங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்தில் 11 கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

அடுத்த முதலமைச்சர் ஈபிஎஸ்தான் - அமைச்சர் பாண்டியராஜன்
அதிமுக என்றும் முதலாவது...

பரப்புரையிலும் சரி சாதனைகளிலும் சரி அதிமுக என்றும் முதலாவதாக இருக்கும். மதுவைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது திமுக அரசு என்று மக்களுக்குத் தெரியும். அதைப் படிப்படியாக அதிமுக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடி உள்ளோம், இன்னும் படிப்படியாகக் குறைப்போம்.

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடிதான்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மட்டுமல்ல; அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிதான் என்று மக்கள் தங்கள் நெஞ்சில் குறித்து வைத்துவிட்டார்கள். அதை வாக்குச்சீட்டில் செலுத்துவது மட்டும்தான் ஒரே வேலை, அதற்கு நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details