சென்னை கேகே நகர் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் பூங்கொடி(40). இவர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை கேகே நகர் பிடி ராஜன் சாலையில் நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் பூங்கொடி இடமிருந்து ஐந்து சவரன் நகையை திருடி சென்றனர். அவரது கூச்சல் கேட்டு அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தை துரத்தி பிடிக்கும் போது, திருடர்கள் ஹெல்மட்டால் தாக்கி உள்ளனர்.
சினிமா பானியில் திருடரை பிடித்த பொதுமக்கள்!
சென்னை: கேகே நகரில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற இரண்டு பேரில் ஒருவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
பின்னர், திருடர்கள் இருவரில் கலந்தர் உசேன் என்பவரை பிடித்து கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த காவல் துறையினர் தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.