சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் அமைந்துள்ளது, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.
ஆனால், வார இறுதி மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டதால், பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், நேற்று பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் பூங்கா வழக்கம் போல் செயல்பட்டது.
அதேபோல், அதிக பொதுமக்கள் வருகை புரிவதால், சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டது. பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, கட்டைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், 300 காவல்துறையினர், 130 வன ஊழியர்கள், 100 தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதல் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்பட்டுத்தப்பட்டிருக்கிறது.