தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுயநலமின்றி சேவையாற்றுபவர்களுக்கு கரவோசை எழுப்பும் மக்கள் - தன்னலமற்று செயல்பட்டவர்களை பாராட்டும் மக்கள்

Claps
Claps

By

Published : Mar 22, 2020, 5:02 PM IST

Updated : Mar 22, 2020, 7:45 PM IST

16:59 March 22

கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக, மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் பணி செய்துவருகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம் காவலர்களும் செயல்பட்டுவருகின்றனர்.

தன்னலமற்று செயல்பட்டுவரும் இவர்களை பாராட்டும் விதமாக வீடுகளின் முன்பு நின்று மக்கள் கைதட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்ற மக்கள் இன்று வீடுகளின் வெளியே வந்து கரகோஷம் எழுப்பி நன்றி தெரிவித்துவருகின்றனர்.  

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வீடுகளில் வெளியே நின்று கை தட்டி தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Last Updated : Mar 22, 2020, 7:45 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details