தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைகட்டிய பொங்கல் பண்டிகை - பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! - pongal celebration chennai

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பானை, கரும்பு, தேங்காய் உள்ளிட்டப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதியது.

பொங்கல்
பொங்கல்

By

Published : Jan 15, 2020, 11:49 AM IST

தமிழ்நாட்டில் இன்று பொங்கல் பண்டிகை பல இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையோட்டி, நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதியது. குறிப்பாக பொங்கல் பானை, கரும்பு, தேங்காய், பழம், பூ, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, தோரணம், வாழைஇலை, கலர் கோலப்பொடி, பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பொருட்களை குடும்பத்துடன் வாங்கிச் சென்றனர்.

சந்தையில் கரும்பு அளவுக்கு ஏற்ப ரூ. 50 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மஞ்சள் கொத்து, தோரணம், துண்டு கரும்பு ஆகியப்பொருட்கள் ரூ. 20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த முறையைவிட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சூடுபிடிக்கும் பொங்கல் பண்டிகை விற்பனை

இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details