தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தான நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி: அச்சத்தில் பொதுமக்கள்! - பெருங்களத்தூர் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி

சென்னை: பெருங்களத்தூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த நிலையிலுள்ள நீர்தேக்க தொட்டி
சேதமடைந்த நிலையிலுள்ள நீர்தேக்க தொட்டி

By

Published : Dec 18, 2020, 8:03 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகே 30 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று அமைந்துள்ளது.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி:

இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது பாழடைந்து, தொட்டியின் தூண்கள் இடிந்து அதிலிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றது.

பாழடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க பெருங்களத்தூர் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் வேண்டுகோள்:

மேலும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகிலேயே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் உள்ளதால் சேதமடைந்த தொட்டி இடிந்து மாணவரக்ளது மீது விழ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

சேதமடைந்த நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி

எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்திவிட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆபத்தான நிலையில் சாய்ந்துவரும் குடிநீர் தொட்டி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details