சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (அக்.24) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, தியாகராய நகரில் பொதுமக்கள் கூட்டம் நேற்று (அக்.22) காலை முதலே அதிக அளவில் காணப்பட்டது. கடந்த ஆண்டுகளில் கரோனா காரணமாக புத்தாடைகள் எடுக்க சென்னை வராத பல மாவட்ட மக்களும் இந்தாண்டு குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சவுத் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, நார்த் உஸ்மான் சாலை, பாண்டி பஜார் என பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அதே சமயத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் குவிக்கப்பட்டுள்ளனர்.