தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வண்டலூர் பூங்காவில் கட்டணம் உயர்வு.. "ரூ.200-க்கு அப்படி ஒன்னும் இல்லை" சுற்றுலா பயணிகள் ஆதங்கம்.. ஈடிவி பாரத் சிறப்பு தொகுப்பு!

Chennai Vandalur Zoo: வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய நுழைவு கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் இதற்கு சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

vandalur zoo ticket price hike
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 12:16 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களின் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. பூங்காக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் கட்டணம் மாற்றம் நேற்று (செப்.9) முதல் அமலுக்கு வந்தது.

பின்னர், வண்டலூர் உயரியல் பூங்க உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு கூறுகையில், "கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு, ஊதியம் மற்றும் விலங்களின் பராமரிப்பு தான் கட்டணம் உயர்விற்கு முக்கிய காராணமாக உள்ளது" என தெரிவித்தார்

மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் விவரம்:

  • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது உள்ள இலவச நுழைவுக் கட்டணம் தொடர்கிறது.
  • 5 - 12 மற்றும் 13 - 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு, அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.20/- மட்டும் வசூலிக்கப்படும்.
  • இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • தற்போது உள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ.25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுளது.
  • பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சஃபாரி வாகனக் கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒலிப்பதிவு (Video camera) கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கட்டண உயர்வால் வண்டலூர் உயரியல் பூங்காவுக்கு வரும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து மதுரையில் இருந்து வரும் சுற்றுலா பயணி இசக்கி பாண்டி கூறுகையில், "நாங்கள் முதல் முறையாக வண்டலூர் பூங்காவை காண குடும்பத்துடன் மதுரையில் இருந்து வருகிறோம். கார் பார்க்கிங் செய்வதற்கு 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

நெடுந்தொலைவில் இருந்து வரும் எங்களுக்கு இது சிரமமாக உள்ளது. ஒரு நபருக்கு 200 ரூபாய் என்பது மிக அதிகம், கார் பார்க்கிங் செய்வதற்கு 50 ரூபாயும், தலா ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்" என்றும் இதனை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், சேலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணி பேசுகையில், "இங்கு வருபவர்கள் பலர் கட்டண உயர்வை கண்டு திரும்பி செல்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் கட்டணம் உயர்த்த பட்டதால் பெரும் சிரமாமாக உள்ளது” என்றார்.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..? - ஆதங்கத்தில் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details