தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாபிராம் அருகே சுடுகாடு இல்லாததால் இறந்த உடலை படகு மூலம் கொண்டு செல்லும் அவலம் - இறந்த உடலை ஆற்றில் கொண்டு செல்லும் அவல நிலை

சென்னை பட்டாபிராம் அருகே சோராஞ்சேரியில் சுடுகாடு இல்லாததால் இறந்த உடலை அடக்கம் செய்ய ஆற்றில் படகு மூலம் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சுடுகாடு இல்லாததால் இறந்த உடலை ஆற்றில் கொண்டு செல்லும் அவல நிலை ...!
சுடுகாடு இல்லாததால் இறந்த உடலை ஆற்றில் கொண்டு செல்லும் அவல நிலை ...!

By

Published : Sep 27, 2022, 4:07 PM IST

சென்னை:பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி மக்கள் அந்த பகுதியில் சுடுகாடு வேண்டுமென 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்போது உள்ள சுடுகாட்டிற்கு செல்ல கூவம் ஆற்றை கடந்து செல்வதாகவும், மழைக்காலங்களில் அதில் வெள்ள பெருக்கு ஏற்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.

சுடுகாடு இல்லாததால் இறந்த உடலை ஆற்றில் கொண்டு செல்லும் அவல நிலை ...!

அந்த வகையில் சோராஞ்சேரியில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த பிரமிளா(35) என்பவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்துவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை உதவியுடன் ரப்பர் படகு மூலம் கூவம் ஆற்றை கடந்து செல்ல உதவினர்.

இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details