தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தருவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, சட்டத் துறை உள்ளிட்ட ஒன்பது அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான முதல் கூட்டம் ஜுன் 14ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், “நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குழுவின் உறுப்பினர்களின் கருத்தாக இருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்து அரசிற்கு அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.