சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வேளச்சேரி பெரியார் நகர் 8ஆவது தெரு மற்றும் 2ஆவது தெரு பகுதிகளில் நேற்றிரவு (நவ.11) முதல் பெய்த கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளன.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.
வேளச்சேரியில் மழை நீருடன் கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடியிருப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:Rajiv Gandhi murder Case: புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை!