தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி. நகரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் அச்சம்! - சென்னை சாலையில் திடீர் பள்ளம்

தி. நகர் துரைசாமி சுரங்கப் பாதை அருகே கழிவுநீர் உடைப்பு காரணமாக உருவான 5 அடி அளவிலான திடீர் பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பள்ளத்தினைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் அச்சம்!
தி.நகரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் அச்சம்!

By

Published : Dec 14, 2021, 11:58 AM IST

சென்னை: தி. நகர் துரைசாமி சுரங்கப் பாதை அருகே உள்ள பிருந்தாவனம், லட்சுமி நாராயணன் தெருக்கள் சந்திப்புச் சாலையில் ஐந்து அடி அளவில் திடீர் பள்ளம் ஒன்று ஏற்பட்டது.

இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாதபோதும், சிறிதுநேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. கழிவுநீர் உடைப்பு காரணமாகப் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது. தற்போது பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:Co-operative loans: கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details