சென்னை பெருநகர மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்கள் வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவது வழக்கம். இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக, ஓய்வூதியர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
'ஓய்வூதியதாரர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்' - சென்னை மாநகராட்சி! - ஆவணங்கள் சமர்ப்பிக்க காலா அவகாசம்
சென்னை: பெருநகர மாநகராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கி, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, ஓய்வூதியர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்கள் இந்த ஆண்டுக்காக சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழ்களுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு (2021) ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஓய்வூதியர்கள் தங்களின் சான்றுகளை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.