சென்னை:சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) கேள்வி நேரத்தின்போது பேசிய ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி தனது தொகுதிக்குள்பட்ட பென்னாகரத்தில் மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, " மாநிலம் முழுவதும் 176 மின்சாரக் கோட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. வருவாய் மாவட்டங்களில் கோட்டம் அமைப்பது தொடர்பாக வட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.