தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போகி அன்று நெகிழியை எரிக்கக் கூடாது - சென்னை மாநகராட்சி - chennai latest news

போகி அன்று நெகிழியை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

penalty-of-rs1000-for-burning-plastic-on-boogie
penalty-of-rs1000-for-burning-plastic-on-boogie

By

Published : Jan 12, 2022, 5:38 PM IST

Updated : Jan 12, 2022, 6:45 PM IST

சென்னை: ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதைப் பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள்களை ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று எரித்துக் கொண்டாடுவோம்.

ஆனால், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சினையில், போகிப் பண்டிகை அன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள்விடுத்தனர்.

இந்நிலையில், சென்னையில் போகிப் பண்டிகையையொட்டி விதிகளை மீறி நெகிழி, டயர்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அஞ்சாத சிங்கம் என் காளை... அது பஞ்சா பறக்கவிடும் ஆளை- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு பார்வை!

Last Updated : Jan 12, 2022, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details