தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை நினைவாக வைத்திருந்த பேனா மாயம் - காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் புகார் - Congress MP Vijay Vasantakumar complains

தந்தையின் நினைவாக வைத்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பேனா மாயமானதாக காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

By

Published : Jul 5, 2022, 3:34 PM IST

சென்னை: குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹா சென்னை வருகை தந்திருக்கும் பொழுது, அவரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் சந்தித்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பேனா மாயமாகியுள்ளது.

குறிப்பாக தனது தந்தையும், மறைந்த வசந்த் அண்ட் கோவின் நிறுவனர் வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால், தந்தையின் நினைவாக உள்ள அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக புகார் அளித்துள்ளார்.

மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்காவை பல அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும்போது கூட்டத்தில் மாயமானதால் நட்சத்திர ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பேனாவை தேடுவதற்கு புகார் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் விஜய் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். வெள்ளியால் ஆன, தங்க நிப்புகள் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த பேனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொதுக் குழுவுக்கு தடை: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details