பொறியியல் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்படுபவர்கள், பொறியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. இந்த விதிமுறைக்கு மாறாக கணிப்பொறி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற தம்பிதுரை, பொறியல் கல்லூரி முதல்வராகப் பதவி வகித்ததற்கு எதிராக புதுச்சேரி அரசிடமும் காமராஜர் கல்லூரியிடமும் உதவிப் பேராசிரியர் புவனேஸ்வரி என்பவர் புகாரளித்துள்ளார். தான் அளித்த புகார் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனு மீது 2 மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து தம்பிதுரை அதே பதவியில் நீடித்ததன் காரணமாக, உதவிப் பேராசிரியர் புவனேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.