வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன் இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது தந்தை உடல்நலத்தை, பாதுகாக்கவும் அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள் பரோல் வழங்கவேண்டி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
பரோலில் வெளிவந்த பேரறிவாளன் அதனடிப்படையில் இன்று காலை 6:25 மணிக்கு பலத்த காவல் பாதுகாப்புடன் பேரறிவாளனை புழல் மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் ஒரு மாத காலம் பரோலில் வெளி வருகிறார்.
அவர் தங்க இருக்கும் அவரது வீடு சுற்றி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் பேரறிவாளனுக்கு இரண்டு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது என்பதும் தண்டனை காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பேரறிவாளனுக்கு நெஞ்சுவலி: ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி