தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா... மனமில்லையா..? - ப.சிதம்பரம் கேள்வி - முதல் இடம்
சென்னை: மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா... அல்லது மனமில்லையா..? என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?-ப.சிதம்பரம் கேள்வி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிநபர் கழிவுகளை மனிதன் தன் கையால் அகற்றும் இழிவில் 1993ஆம் ஆண்டு முதல் இன்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் என்பது வெட்கக்கேடு. மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? அல்லது மனமில்லையா?" என்று, கேள்வி எழுப்பியுள்ளார்.
Last Updated : Jul 10, 2019, 11:24 PM IST