திண்டுக்கல்:பழனி அடிவாரம் இடும்பன் கோயில் சாலையில் வசித்து வருபவர், தங்கவேலு. இவரது மனைவி தங்கப்பொண்ணு. இவர் வீட்டின் அருகேயுள்ள கடையில் மளிகைப்பொருள்களை வாங்கச்சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர் வந்தனர். அதிலிருந்த ஒருவர் மட்டும் கடையில் பொருள்களை வாங்குவது போல அப்பெண்ணின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளார்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு இளைஞருடன் தப்பியோடினார். பின்னர், தங்கப்பொண்ணு எழுந்து கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருடர்களை விரட்டினர்.