தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈழத் தமிழர்களுக்கு தொண்டாற்றும் நடிகர் சத்யராஜின் மகள் - பழ.நெடுமாறன் வாழ்த்து - இலங்கை

இலங்கை தமிழ் மக்களுக்கு நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தொண்டாற்றுவது குறித்து அறிந்த பழ.நெடுமாறன் அவரை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார்.

Pazha Nedumaran congratulated Sathyaraj daughter for doing charity work for Eelam Tamil people
ஈழத் தமிழ் மக்களுக்கு தொண்டு செய்து வரும் சத்யராஜ் மகளுக்கு பழ.நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

By

Published : Feb 25, 2023, 5:57 PM IST

சென்னை: நடிகர் சத்யராஜ் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இலங்கை நாட்டில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமைப்பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்ற பெயரில் என்னுடைய மகள் திவ்யாவும், ஈழத்து காந்தி என அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திர ஹாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை அங்கே தொடங்கியுள்ளனர். இது அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் ஈழத் தமிழர்களுக்காக எனது மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

சத்யராஜின் இந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து பழ.நெடுமாறன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார்" என தாங்கள் வெளியிட்ட அறிக்கையை கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன் இலங்கையில் உள்ள நெடுந்தீவில் பசுமைப் பள்ளி, பசுமை சமுதாயம் என்ற அமைப்புகளின் மூலம் ஈழத்தமிழர் குழந்தைகளுக்குத் தொண்டாற்றி வரும் ஈழத்துக் காந்தி என்றழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரகாசன் உடன் இணைந்து தங்களின் அருமைப்புதல்வி திவ்யா தொண்டாற்றி வருவதை அறிந்து மிகமகிழ்ந்தேன்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என வள்ளுவர் கூறியதைப் போல தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத் தமிழர்களுக்கு ஆற்றிவரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் என்ற குறளுக்கு ஏற்ப உங்கள் மகள் திவ்யா, உங்களுக்கு பெருமையை பெற்றுத் தருவது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

செல்வி திவ்யாவின் தொண்டு மேலும் மேலும் பெருகட்டும். ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். தங்களுக்கும், தங்கள் மகளுக்கும் எனது பாராட்டும் வாழ்த்தும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? - உண்மை நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details