தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமதப்படுத்திய ஓய்வூதிய பணப்பலன்களை 6% வட்டியுடன் வழங்க உத்தரவு! - madras HC Bench

சென்னை: ஓய்வூதிய பணப்பலன்களை வழங்காமல் தாமதப்படுத்திய வழக்கில், அவற்றை ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டியுடன் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
உயர் நீதிமன்றம்

By

Published : Feb 11, 2021, 3:45 PM IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநர், நடத்துநர்களாக பணியாற்றிய ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களை வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டி வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓய்வூதிய பணப்பலன்களை 6 விழுக்காடு வட்டியுடன், ஆறு தவணைகளாக வழங்கும்படி வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இவ்வழக்கிலும் ஓய்வுபெற்ற ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 6 விழுக்காடு வட்டியுடன் வழங்கிட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தத் தொகையை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 விழுக்காடு வட்டியைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்" எனத் தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க:அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details