தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபராதமின்றி வரி செலுத்த செப்.30 வரை அவகாசம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்கு, சொத்து வரி , தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை அபராதம் இன்றி வரும்  30ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

pay tax without penalty till September 30th said Chennai Corporation
pay tax without penalty till September 30th said Chennai Corporation

By

Published : Sep 2, 2020, 7:57 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்து வரி தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட வரி வருவாய் இனங்கள். வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி 2019-2020 ஆண்டில் மார்ச் 31ஆம் தேதிக்குள் சொத்து உரிமையாளர்கள் / நிறுவனத்தாரர்களால் சட்ட விதிகளின் படி செலுத்தப்பட வேண்டும்.

ஆனால் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய வரிவருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் செலுத்த வேண்டிய வருவாய் இனங்களை எந்தவித தண்டனையும் விதிக்கப்படாமல் செலுத்த ஏதுவாக கடந்த ஜூன் 30ஆம் தேதிவரை ஒத்திவைக்க அரசு ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி எந்தவித அபராதம் மற்றும் தண்டனை தொகையின்றி வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details