சென்னை பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் ஸ்ரீ தேவி நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சண்டியாகம் என சொல்லக்கூடிய தடை நிவர்த்தி யாகம் நடைபெற்றது.
மழை வேண்டி சண்டி யாகம்! - sandi yagam
சென்னை: பட்டாபிராமில் உள்ள ஸ்ரீதேவி நாகாத்தம்மன் ஆலயத்தில் மழை வேண்டி சண்டி யாகம் நடைபெற்றது.
இதனை ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். யாகத்தில் பாலமுருகடிமை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு யாகத்தை சிறப்பித்தனர். யாகத்தில் கிலோ கணக்கில் நவதானியங்களும், டன் கணக்கில் காய் கனிகளும் போடப்பட்டன. இந்த யாகத்தின் நோக்கம் உலக மக்கள் உணவு பற்றாக்குறை இல்லாமலும், நீர் பற்றாக்குறை இல்லாமலும் அனைத்து செல்வங்களோடும் இருக்கவேண்டும் என்பதே ஆகும்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 5000-க்கும் மேற்பட்டோருக்கு புடவை, வேஷ்டிகள் வழங்கப்பட்டது. பின்னர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 6000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.