இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட், "தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மையத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரமறிந்து, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இந்த விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பள்ளிச் சார்ந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சில முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதாக தெரியவந்தது.
பள்ளி விடுமுறை: ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமா? - பள்ளிக் கல்வித் துறை
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் வரவேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
school education deparmen
அதனையடுத்து, மாணவர்களில்லாத போது ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது என்பது கால, நேர விரயம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பனிடம் முறையிட்டேன். அதற்கு அவர், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அவசியில்லை. எனினும், பள்ளிக்கல்வித் துறை செயலரிடம் கலந்துரையாடி முழுமையான விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா விடுமுறை: பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது...