தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் வடியாத மழைநீர்: நோயாளிகள் அவதி

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக மழைநீர் வடியாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் வடியாத மழைநீர்
அரசு மருத்துவமனையில் வடியாத மழைநீர்

By

Published : Nov 12, 2021, 3:00 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்தது. இதனால் சென்னை முழுவதும் நீர் ஆறுபோல ஓடிக்கொண்டிருக்கிறது. நகரின் பல்வேறு பகுதிகள் குளம்போல் காட்சியளிக்கின்றன.

அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து ஏரிபோல் காட்சியளித்தது.

மேலும் மருத்துவமனைக்குள் மழை நீர் நுழைந்ததால் நோயாளிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் சில நோயாளிகள் முதல் தளத்திற்கும், பலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் வடியாத மழைநீர்

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் (நவ. 12) குரோம்பேட்டை அரசு மருத்துவமனையைச் சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடியாமல் உள்ளதால் நோயாளிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

மேலும் மின்மோட்டார் மூலம் நகராட்சி அலுவலர்கள் இன்று மாலைக்குள் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கனமழையால் நிரம்பிய சித்திரை குளம் - கண்டு ரசித்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details