தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்ஸிஜன் தர மறுத்ததால் கரோனா நோயாளி தற்கொலை! - corona patient suicide

சென்னை சேலையூர் பகுதியில் ஆக்ஸிஜன் தர மறுத்ததால் மருத்துவமனை மேல்தளத்தில் இருந்து கரோனா நோயாளி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

ஆக்சிஜன் தர மறுத்ததால் நோயாளி தற்கொலை
ஆக்சிஜன் தர மறுத்ததால் நோயாளி தற்கொலை

By

Published : May 22, 2021, 4:27 PM IST

சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர், டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று (மே.21) இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு ராஜேந்திரனின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இன்று (மே.22) காலை மட்டும் சிகிச்சை அளிக்குமாறு உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, அதிகாலை உறவினர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். பின்னர், உறவினர்களுக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததுள்ளது. அப்போது, ராஜேந்திரன் மருத்துவமனை மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் வழங்காததால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சேலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: என் தாயின் வலி பிறருக்கு வரக்கூடாது: ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் பெண்!

ABOUT THE AUTHOR

...view details