சென்னை: ‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் ‘ராஜா கிளி’ என்னும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை நேற்று (ஆகஸ்ட் 3) எளிய முறையில் நடைபெற்றது.
தம்பி ராமையா இயக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிப்போடு தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகையும் இந்தப் படத்திற்கு தேவை என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பல பெண்களில் சுவேடா ஷ்ரிம்ப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மியாஸ்ரீ சவுமியாவும் நடிக்க உள்ளார்.
முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின், இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சமுத்திரக்கனி - தம்பி ராமையா காம்போவில் புதிய படம் ‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்னைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தாயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஆகஸ்ட் 3) சென்னையில் தொடங்கியது.
இதையும் படிங்க: ஷாருக்கான் உடன் சண்டை செய்யும் விஜய் சேதுபதி!